Tuesday 26 January 2016

நூல் 02

ஆசிரிய பேச்சாளர்களின் மீதுள்ள குட்றச்சாட்டு “ என்னுமோ பேச்சுல அவர பத்தி கொஞ்சம் அதிகமாவே பேசராரு” என்பது ஆகும். இதற்கு காரணம் மாணவர்கள் எங்கோ நடந்ததையோ யாருக்கோ நடந்ததையோ அல்லது சொல்பவர் வாழ்வில் நடந்ததை அவரே சொல்வதாக கேட்பதையோ விரும்புகின்றனர். சில விதிவிலக்குகள் உள்ளன. இக்காலக்கட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆசிரியர்கள் மாணவ வயதிலும் மனநிலையிலுமே உள்ளனர். இதற்கு காரணமாக

(1) ஆசிரியர் பணி அரசு பணிக்காண எளிய நுழைவாக பார்க்கப்படுவது
(2) குறைந்தபட்ச ஊதியத்திலாவது உடனடி வேலையாக கருதப்படுவது.
(3) பெண்களுக்கான பாதுகாப்பான அதிக ஓய்வு கிடைக்ககூடிய பணி என்ற மாயை.

இவை அனைத்தையும் தாண்டி குழந்தைகளோடு , அவர்களது மனநிலையோடு, சமூகத்தின் எதிர்காலத்தோடு பயணிக்கிறோம் என்ற எண்ணமும் ஈடுபாடும் இருப்பின் படிப்புடன் மனிதமும் சேர்ந்து உயரும். 

இக்கட்டான இக்காலகட்டத்தில் எந்தவித இழக்கும் அற்று பெற்றோருக்காகவும், ஊதியத்திற்காகவும், கிடைத்த படிப்பு என்பதற்காகவும் ஆசிரியர் பணிக்கு வந்தவர்களுக்கு நல்ல சிற்பியாகவும், முழு ஈடுபாட்டுடன் பணிக்கு வந்து எவ்வாறு துவங்கி எப்படி முன்னேற வேண்டும் என தவித்து இருப்போருக்கு கலங்கரை விளக்காகவும் ச. மாடசாமி ஐயா வின் “எனக்குரிய இடம் எங்கே? கல்வி கூட சிந்தனைகள்” என்ற நூல் உள்ளது.

அய்யப்பராஜின் செயல்களை படிக்க துவங்கும் பொழுது “ அட ஒரு அறிவியல் ஆசிரியரியராக இவர் இருந்து இருக்ககூடாதா?” என்ற ஏக்கம் அறிவியல் ஆசிரியரான எனக்கு ஏற்பட்டது . அவரின் ஒவ்வொரு முயற்சியும் மாணவனை முன்னேற்ற என்பதைவிட ஆசிரியர்கள் எவ்வாறு மேம்பட வேண்டும் என்பதற்கான வழியாகவே உள்ளது. 

வகுப்பறையை தாண்டி கல்வியிலும் தனிமனித மேம்பாட்டிலும் ஆசிரியரின் பங்கை எளிமையாக கூறிய விதத்தில் பிரபஞ்சனின் “மரி எனும் ஆட்டுக்குட்டி” தான் ஏனோ நினைவில் ஊசலாடி செல்கிறது. புதிய முற்சிகளுக்கான எண்ணங்கள் உதித்தாளும் மதிப்பெண்ணும் பணமும் சூழலை உருவாக்க தடையாக உள்ளன.

”மாணவர்களிடம் கற்போம் “ மூலம் நமக்கான சுய மதிப்பீட்டை அடைந்து அடுத்த தலைமுறைக்கும் நமக்குமான இடைவெளியை குறைத்துக்கொள்ள முடியும்.
எனக்குறிய இடம் என்பது மாண்வருக்கு உரியது மட்டும் அல்ல ஒவ்வொரு மனிதனுக்குமான தேடலை செம்மை படுத்தும் வழிகளாகும்.

புத்தகத்தை முழுமையாக படித்த பலனை ஏறக்குறைய ஒவ்வொரு பக்கத்தில் உள்ள படமும் ஒரிரு வாக்கயமும் தந்துவிடுகிறது. 

பள்ளி ஆசிரியையான எனக்கு கல்லூரி கலத்தில் உள்ள இந்த நூல் கற்பித்ததை விட கற்க தூண்டியதே அதிகம் என்பதிலும் மகிழ்சியே. 

கற்பனையால் உருவாக்கப்பட்ட கல்வி முறையையும், கொள்கையையும் காட்டிலும் அணுப கல்வி ஆயிரம் முறை சிறந்தது என்ற முறையில் “எனக்குரிய இடம் எங்கே? கல்வி கூட சிந்தனைகள்” என்ற ச. மாடசாமி ஐயாவின் புத்தகம் ஒரு வழிகாட்டி மட்டும் அல்ல நல்ல தோழனும் கூட குறிப்பாக மொழிப்பாட ஆசிரியர்களுக்கு.

Sunday 10 January 2016

அப்பா கவிதை

திருடனின் ரேகையில்
தெரியவேயில்லை
திருடனென்று

Sunday 3 January 2016

நூல் 1

ஒரு சில சிறுவர்களுக்கான புத்தகத்தை படித்த மற்றும் சிறுவர்களுக்கான எழுத்தாளர்களுடன் பேசியதில் இருந்தும் நல்ல கதையானது எப்பொழுதும் ஏதேனும் நீதிநெறிகளை கூற தேவையில்லை , குழந்தையின் மனவெளியில் பயணிக்கவைப்பதாகவும் அவர்களை உற்சாகமூட்டுவதும் அதிமுக்கியம் என்பதை உள்வாங்கி உணர்ந்து கொண்டேன். அதன் பிறகு நான் குழந்தைகளுக்கு கதை சொல்ல தேர்ந்தெடுக்கும் தன்மைகளும் மாறிப்போனது. 

அந்த விதத்தில் இரா . நடராசன் மொழிபெயர்த்துள்ள "நீ எறும்புகளை நேசிக்கிறாயா?" குழந்தைகளுக்கான புத்தகம். 7 கதைகளில் 3 குழந்தைகளுக்கான நீதிநெறிகள் மற்றும் அறிவுரைகளை தாங்கியுள்ளது. மற்றவை குழந்தைகளுக்கான பயணமாக உள்ளது. 2006 ல் குழந்தையாக இருந்த ஜோ வின் கைவண்ணத்தில் ஓவிங்கள் , ஓவிங்கள் மட்டுமல்ல கருத்து சித்திரங்களும் கூட.

 மந்திர கம்பளத்தில் ஓவியமும்,
 பேய் என்கிற ஒன்று இல்லை என்பதில் சமூகத்தில் பிணம் பேய் சார்ந்து நம்பப்படும் தேவையற்ற மூடநம்பிக்கையும், தந்தைக்கு மகனின் மீதுள்ள அக்கறையும் , உழைப்பின்றி ஏதும் நிரந்தரம் அல்ல என்பதும் விளையாட்டாய் நகர்ந்துள்ளது. 

தொலைந்தவர்கள் உலகம் வேடிக்கையாய் ஆரம்பித்து குழந்தைகளின் புத்திகூர்மையெம் , அதன்மூலம் உட்கொள்ளும் உணவில் எது தேவையென்றும் விளக்கும் விதமாக உள்ளது.  

ஓய்வு .... மகனே ... ஓய்வு.... யில் ஒத்த வயது  குழந்தைகளின் தானே பெரியவன் தனக்கு மற்றவர்களைவிட அதிகம் தெரியும் எனும் மனவோட்டமும் நன்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. 

அவர்கள் இருவர்க்குள் என்பதில் இராசியான ஆசிரியர் எவ்வாறு வெறுக்கப்பட்டார் என்றும், பக்கத்து வீட்டுக்காரர் என்பதில் வெறுத்து ஒதுக்கப்பட்ட ஆசிரியர் எவ்வாறு நேசிக்கப்பட்டார் என்று எடுத்து இயம்புகிறது. 

மணிமகுடமாய் உள்ள நீ எறும்புகளை நேசிக்கிறாயா என்ற கதை என் மனதில் குழந்தைகளுக்கான வெளியை நெருக்கமாக விவரித்து உள்ளது. இதனை படித்த பிறகு மொழிபெயர்க்க தேர்ந்தெடுத்த  மற்ற கதைகளிலோ மொழிப்பெயற்பிளோ இந்த நெருக்கம் , தெளிவு மிஸ்ங் எனும் பிம்பத்தையோ உணர்வையோ ஏற்படுத்துகிறது. 

குறிப்பு :1  
           இதனை படித்து கதை சொல்ல முயற்சிப்பதைவிட குழந்தைகளுக்கு பரிசளிப்பது சிறந்தது என எனக்கு தோன்றுகிறது. இது குழந்தைகளுக்கான புத்தகம் . 

குறிப்பு: 2 
   அவர்கள் இருவருக்குள் படிப்பது தனிகலை . உபயோகப்படுத்தியுள்ள சுமார் 15 சீன பெயர்களை நினைவில் நிறுத்தி பக்கங்களை புறட்டாமல் கதையை படித்து முடிப்பவரின் நினைவாற்றலுக்கு ஒரு சபாஷ்