Tuesday 26 January 2016

நூல் 02

ஆசிரிய பேச்சாளர்களின் மீதுள்ள குட்றச்சாட்டு “ என்னுமோ பேச்சுல அவர பத்தி கொஞ்சம் அதிகமாவே பேசராரு” என்பது ஆகும். இதற்கு காரணம் மாணவர்கள் எங்கோ நடந்ததையோ யாருக்கோ நடந்ததையோ அல்லது சொல்பவர் வாழ்வில் நடந்ததை அவரே சொல்வதாக கேட்பதையோ விரும்புகின்றனர். சில விதிவிலக்குகள் உள்ளன. இக்காலக்கட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆசிரியர்கள் மாணவ வயதிலும் மனநிலையிலுமே உள்ளனர். இதற்கு காரணமாக

(1) ஆசிரியர் பணி அரசு பணிக்காண எளிய நுழைவாக பார்க்கப்படுவது
(2) குறைந்தபட்ச ஊதியத்திலாவது உடனடி வேலையாக கருதப்படுவது.
(3) பெண்களுக்கான பாதுகாப்பான அதிக ஓய்வு கிடைக்ககூடிய பணி என்ற மாயை.

இவை அனைத்தையும் தாண்டி குழந்தைகளோடு , அவர்களது மனநிலையோடு, சமூகத்தின் எதிர்காலத்தோடு பயணிக்கிறோம் என்ற எண்ணமும் ஈடுபாடும் இருப்பின் படிப்புடன் மனிதமும் சேர்ந்து உயரும். 

இக்கட்டான இக்காலகட்டத்தில் எந்தவித இழக்கும் அற்று பெற்றோருக்காகவும், ஊதியத்திற்காகவும், கிடைத்த படிப்பு என்பதற்காகவும் ஆசிரியர் பணிக்கு வந்தவர்களுக்கு நல்ல சிற்பியாகவும், முழு ஈடுபாட்டுடன் பணிக்கு வந்து எவ்வாறு துவங்கி எப்படி முன்னேற வேண்டும் என தவித்து இருப்போருக்கு கலங்கரை விளக்காகவும் ச. மாடசாமி ஐயா வின் “எனக்குரிய இடம் எங்கே? கல்வி கூட சிந்தனைகள்” என்ற நூல் உள்ளது.

அய்யப்பராஜின் செயல்களை படிக்க துவங்கும் பொழுது “ அட ஒரு அறிவியல் ஆசிரியரியராக இவர் இருந்து இருக்ககூடாதா?” என்ற ஏக்கம் அறிவியல் ஆசிரியரான எனக்கு ஏற்பட்டது . அவரின் ஒவ்வொரு முயற்சியும் மாணவனை முன்னேற்ற என்பதைவிட ஆசிரியர்கள் எவ்வாறு மேம்பட வேண்டும் என்பதற்கான வழியாகவே உள்ளது. 

வகுப்பறையை தாண்டி கல்வியிலும் தனிமனித மேம்பாட்டிலும் ஆசிரியரின் பங்கை எளிமையாக கூறிய விதத்தில் பிரபஞ்சனின் “மரி எனும் ஆட்டுக்குட்டி” தான் ஏனோ நினைவில் ஊசலாடி செல்கிறது. புதிய முற்சிகளுக்கான எண்ணங்கள் உதித்தாளும் மதிப்பெண்ணும் பணமும் சூழலை உருவாக்க தடையாக உள்ளன.

”மாணவர்களிடம் கற்போம் “ மூலம் நமக்கான சுய மதிப்பீட்டை அடைந்து அடுத்த தலைமுறைக்கும் நமக்குமான இடைவெளியை குறைத்துக்கொள்ள முடியும்.
எனக்குறிய இடம் என்பது மாண்வருக்கு உரியது மட்டும் அல்ல ஒவ்வொரு மனிதனுக்குமான தேடலை செம்மை படுத்தும் வழிகளாகும்.

புத்தகத்தை முழுமையாக படித்த பலனை ஏறக்குறைய ஒவ்வொரு பக்கத்தில் உள்ள படமும் ஒரிரு வாக்கயமும் தந்துவிடுகிறது. 

பள்ளி ஆசிரியையான எனக்கு கல்லூரி கலத்தில் உள்ள இந்த நூல் கற்பித்ததை விட கற்க தூண்டியதே அதிகம் என்பதிலும் மகிழ்சியே. 

கற்பனையால் உருவாக்கப்பட்ட கல்வி முறையையும், கொள்கையையும் காட்டிலும் அணுப கல்வி ஆயிரம் முறை சிறந்தது என்ற முறையில் “எனக்குரிய இடம் எங்கே? கல்வி கூட சிந்தனைகள்” என்ற ச. மாடசாமி ஐயாவின் புத்தகம் ஒரு வழிகாட்டி மட்டும் அல்ல நல்ல தோழனும் கூட குறிப்பாக மொழிப்பாட ஆசிரியர்களுக்கு.

No comments:

Post a Comment